fbpx
Homeபிற செய்திகள்ஹிமாலயாவின் ‘க்ரெம் க்ளென்சிங் பேபி பார்’ அறிமுகம்

ஹிமாலயாவின் ‘க்ரெம் க்ளென்சிங் பேபி பார்’ அறிமுகம்

இந்தியாவின் முன்னணி உடல்நல பராமரிப்பு பிராண்டுகளில் ஒன்றான ஹிமாலயா வெல்னஸ் கம்பெனி, குழந்தைப் பராமரிப்பிற்கான அதன் தயாரிப்பு ரகங்களில் புதிய வரவாக, ‘க்ரெம் க்ளென்சிங் பேபி பார்’ (Crème Cleansing BABY BAR)–ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் தேங்காய்ப் பால் புரோட்டீனின் ஊட்டம் தரும் நற்குணங்களும், பல்வேறு இயற்கையான மூலப்பொருள்களின் கலவையும் நிறைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் மற்றும் சென்சிட்டிவ் சருமம் கொண்ட குழந்தைகளுக்காகவே 100% சோப் இல்லாமல், சமநிலை கொண்ட ஃபார்முலாவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹிமாலயா வெல்னஸ் கம்பெனியின் பேபிகேர் பிரிவின் இயக்குநர் என்.வி.சக்ரவர்த்தி கூறியதாவது:

குழந்தைகளின் பிரத்யேக பராமரிப்பிற்காக, ‘க்ரெம் க்ளென்சிங் பேபி பார்’ என்கிற புதிய வரவினை, வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

குழந்தையின் சருமம் மென்மையானதாகவும், சென்சிட்டிவானதாகவும் உள்ளது மற்றும் அடோபிக் டெர்மாடிடிஸ் என்கிற சரும பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

5.5 என்கிற pH அளவு கொண்ட இந்த க்ரீம் க்ளென்சிங் பேபி பார் பச்சிளம் குழந்தைகள், எளிதாக பாதிக்கக்கூடிய சென்சிட்டிவான சருமம் கொண்ட குழந்தைகள், மற்றும் அடோபிக் டெர்மடிடிஸ், தோல் எரிச்சல், சிவந்து போகுதல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய சருமத்தினை கொண்ட குழந்தைகளின் சருமத்தை மென்மையாக சுத்தப்படுத்தும் சரியான இயற்கை மூலப்பொருட்களால் செறிவூட்டப்பட்டதாகும் என்றார்.

“குழந்தைகளின் சருமத்தின் pH அளவை சரியாகப் பராமரிப்பதும், அவர்களது “ஆசிட் மேண்டிலை” (தோலின் முதல் அடுக்கு பாதுகாப்பு) பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாகும்”, என்று ஹிமாலயா வெல்னஸ் நிறுவனத்தின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின், ஆயுர்வேத வல்லுநர், டாக்டர் பிரதிபா பாப்ஷெட் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img