fbpx
Homeபிற செய்திகள்பேட்டர்சன் கேன்சர் சென்டரில் ‘ரோஸ் டே’

பேட்டர்சன் கேன்சர் சென்டரில் ‘ரோஸ் டே’

பேட்டர்சன் கேன்சர் சென்டர் (HCC)), கேன்சர் அலிவியேஷன் ஃபவுண்டே ஷன் (சிஏஎல்எஃப்.) ஆகி யவை ரோஸ்டேவை ஏற்பாடு செய்தன.

ரோஸ் டே என்ற சிறுமி மெலிண்டா ரோஸின் பெயரிலிருந்து உருவானது. இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22-ம் தேதி உலகம் முழுவதும் நடத்தப் படுகிறது. இந்த ஆண்டு பேட்டர்சன் புற்றுநோய் மையத்தில் புற்றுநோய் நோயாளிகளின் 21-து ஆண்டு ரோஸ் டே நிகழ்வில், புற்றுநோயை எதிர்த்துப் போராடியபோது, ​​தங்கள் அன்பானவர்களிடமிருந்து பெற்ற அன்பு, அக்கறை மற்றும் நம்பிக்கையைப் பற்றி பேசினர். பேட்டர்சன் கேன்சர் கேன்சர் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். விஜயராகவன் வரவேற்றார். பல புற்றுநோயாளிகளுடன் கலந்துரையாடினர்.

அனைத்து நோயாளி களுக்கும் தினசரி தேவைக்கான கிட் பேக் வழங்கப்பட்டது.
கே.குருமூர்த்தி பிரதம அதிதியாக பங்கேற்றார்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மூத்த துணைத் தலைவர் கிருஷ்ணசாமி குல்லி, தாம்பரம், காவல்துறை ஆணையர் டாக்டர் அமல்ராஜ், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டாக் டர் ஏ.கலியமூர்த்தி ஆகியோர் பேசினர்.

மதன் பாப் தனது ஆசிகளை ஆடியோ மூலம் அனுப்பி இருந்தார். புற்றுநோய் ஒழிப்பு அறக்கட்டளையின் (CALF) அறங்காவலர் பி.டி. கோவிந்தராஜன் நன்றி கூறினார். 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img