கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் அசோசியேசன் மற்றும் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து “அறிவியல் உள்ளீடு மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம், நிலையான வளர்ச்சிக்கான பெண்கள் அதிகாரம்“ என்ற தலைப்பில் கருத்தரங்கம் 2 நாட்கள் நடந்தது.
இந்த கருத்தரங்கிற்கு கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குனருமான டாக்டர் சி. ஏ.வாசுகி தலைமை தாங்கினார். கோவை ஐ.எஸ்.சி.ஏ. கன்வீனர் டாக்டர் எஸ்.பவுல்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்
இந்த தேசிய கருத்தரங்கை இந்தியன் சையின்ஸ் காங்கிரஸ் சங்கம் தேசிய தலைவர் டாக்டர் விஜெய் லட்சுமி சக்சேனா தொடங்கிவைத்து உரை நிகழ்த்தினார்.
விழாவில் முன்னாள் தலைவர் டாக்டர் அசோக் குமார் சக்சேனா , பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணா, கோவை ஐ.சி.ஏ.ஆர். இயக்குனர் டாக்டர் ஹேமபிரியா, ஐ.எஸ்.சி.ஏ. கவுன்சில் மெம்பர்கள் டாக்டர் மனோஜ்குமார், பேராசிரியர் கங்காதர், மற்றும் டாக்டர் நிபேடியா சக்ரபர்தி, டாக்டர் ஆர்.டி.நரேந்திர கண்ணன், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.