கோவையை தலைமை இடமாக கொண்டு நீர் மேலாண்மை தீர்வு களை வழங்கும் ‘கிராம் என்வோ சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் கொடிசி யாவில் நடைபெற்ற கட்டுமான துறை கண்காட்சியான ‘பில்ட் இன்டெக்‘ நிகழ்வில் ஜெர்மன் தொழில்நுட்பம் மற்றும் இந்திய பொறியியல் திறனில் உருவான தன்னுடைய புது அதிநவீன கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது.
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜமாணிக்கம், நிர்வாக பார்ட்னர் பிரியங்கா சுந்தர் மற்றும் அதன் ஜெர்மன் பார்ட்னர் இணைந்து இதை அறிமுகப்படுத்தினர்.
செய்தியாளர்களிடம் இந்த இயந்திரத்தை குறித்து கிராம் என்வோ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜமாணிக்கம் கூறியதாவது: மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு இந்திரங்களை அப்பார்ட்மெண்ட்களிலும் பெரும் கட்டிடங்களிலும் அமைத்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று அறிவித்திருக்கிறது அதன்படி பெரும் கட்டிடங்களின் உரிமையாளர்கள் இந்த இயந்திரங்களை தங்களுடைய கட்டிடங்களிலும் நிறுவனங்களிலும் அமைக்க துவங்கியுள்ளனர்.
சுத்திகரிப்பு இயந்திரங்கள்
ஆனால் இன்று சந்தையில் உள்ள பல கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பொருத்துவதற்கும் இயக்குவதற்கும் ஏற்படும் செலவுகள் வாடிக்கையாளரின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கிறது.
கிராம் என்வோ சொல்யூஷன்ஸ் இந்தத் துறையில் சிறந்து விளங்கக் கூடிய ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் தொழில்நுட்பத்தை நம்முடைய சந்தைக்கும் வாடிக் கையாளர்களுக்கும் ஏற்ப வடிவ மைத்திருக்கிறோம்.
ஜெர்மன் தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம் மூலம் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், அப்பார்ட்மெண்டுகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும். பிற இயந்திரங்களை விட இதில் பல சிறப்புகள் உள்ளது.
இது தானாக இயங்க கூடியது. மற்ற இயந்திரங்களை விட 50% குறைந்த மின்சாரத்தை உபயோகிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது இயங்கும் போது மிக குறைந்த சத்தம் (ஒரு ஃபேன் ஒடும்) மட்டுமே எழும், மேலும் சுத்திகரிப்பு செய்யும் போது எந்த வாடையும் எழாது.
எனவே அக்கம் பக்கம் உள்ளோர் சிரமப்பட தேவையே இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.