கேம்போர்டு கிரிக்கெட் அகாடமியின் சர்வதேச தரத்திலான 3000 சதுர அடி, 3 லேன் புல்வெளி (டர்ப்) கிரிக்கெட் தரையை, இந்திய அணி வீரர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் துவக்கி வைத்தார்.
தோல்வியை எப்படி சமாளிப்பது, விடா முயற்சியுடன் வெற்றியை எவ்வாறு தழுவுவது என்பது பற்றி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து தினேஷ் கார்த்திக் பேசி னார். கேம்போர்டு பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொண்டு பேட்டிங் செய்தார். மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கேம்போர்டில் கிரிக்கெட் மட்டுமின்றி வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டுக்கு அமைக்கப்பட்டு உள்ள புல்தரையையும், உள்கட்டமைப்பு விளையாட்டு வசதிகளையும் பார்த்து பிரமிப்படைந்தார்.
சமநிலை பார்வை
பள்ளியில் கல்வி மற்றும் விளையாட்டுக்கு சமநிலை பார்வை இருப்பதாக அவர் பாராட்டு தெரிவித்தார். கிரிக்கெட் ஒரு சமத்துவ விளையாட்டாக இருப்பதால், கேம்போர் டில் சிறுவர் மற்றும் சிறுமிகளிடையே சமமாக வளர்க்கிறது.
இந்த புல்தரையை வளரும் கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதற்கான ஒரு தளமாக கேம்போர்டு கருதுகிறது. உலக அளவில் இந்தியாவை பிரதிநிதிப்படுத்தவும் அது உந்து சக்தியாக இருக்கிறது.
பள்ளித் தலைவர் அருள்ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ், முதல்வர் பூனம் சயால் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.