fbpx
Homeபிற செய்திகள்ஆசியாவிலேயே முதலாவதாக துவக்கம்: கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் மார்பக தொழில்நுட்ப பயிற்சி மையம்

ஆசியாவிலேயே முதலாவதாக துவக்கம்: கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் மார்பக தொழில்நுட்ப பயிற்சி மையம்

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஆசியாவிலேயே முதலாவதாக மார்பக தொழில்நுட்ப பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்கவிழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வும் நேற்று (23-ந்தேதி) நடைபெற்றது.

விழாவில் கே.எம்.சி.எச்.செயல் இயக்குனர் அருண் என்.பழனிசாமி, ஹோலோஜிக் நிறுவனத்தின் ஆசிய மண்டல உதவி தலைவர் மற்றும் பொதுமேலாளர் விண்டாசியா, வெங்கட்ராமன், வர்த்தக இயக்குனர் பவுல்ஸ்டீபன், டாக்டர் மேத்யூ செரியன், டாக்டர் ரூபாரங்கநாதன், டாக்டர் பிரேமா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கே.எம்.சி.எச். மற்றும் ஹோலோ ஜிக் கூட்டுறவு

இதுகுறித்து கே.எம்.சி.எச்.மருத்துவமனை செயல் இயக்குனர் அருண் என்.பழனிச்சாமி கூறியதாவது: கே.எம்.சி.எச். மற்றும் ஹோலோ ஜிக் கூட்டுறவு மூலம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படும் அதே நவீன மருத்துவ தொழில்நுட்பம், மென்பொருள் கோவை கே.எம்.சிஎச் மார்பக புற்றுநோய் மையத்திலும் துல்லியமாக கிடைக்கும்.

இந்த மையம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றது. மெமோகிராபி பரிசோதனை மூலம் முன்கூட்டியே நோய் கண்டறிவதன் மூலம் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற முடியும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img