கோவை மாவட்ட வனத்துறை மூலம் இலவ சமாக மரக்கன்றுகள் வழங் கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை ஒரு முதன்மை திட்டமாக தொடங்கியுள்ளது
இதன் நோக்கம் மாநிலத்தில் தற்போது உள்ள பசுமைப் பரப்பை 23.71 சதவீதத்தி லிருந்து 33 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை வன விரிவாக்கம் கோட்டத்திற்கு உட்பட்ட வன விரிவாக்கு சரகம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் நர்சரியின் சார்பாக 1.25 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்கள் விவசாயிகளுக்கு கல்வி நிலையங்களுக்கு தொழில் நிறுவனங்கள் போன்ற வற்றுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இங்கு சவுக்கு, தேக்கு,பலா, பாதாம், வேம்பு, மகாகனி, மலை வேம்பு, மகிழம்,நீர் மருது, சந்தனம் போன்ற 25 வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது . மரக்கன்றுகள் தேவைப்படுபவர்கள் 9843611370, 8760678628 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெற் றுக் கொள்ளலாம் என்று கோவை வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேட்டுப்பாளையம் கோத்திகிரி சாலையில் உள்ள மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நிலையத்தில் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும்வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் நாற்றுக்கள் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வன விரிவாக்க மாவட்ட உதவி வன பாதுகாவலர் தினேஷ் குமார், மேட்டுப்பாளையம் வன விரிவாக்க வனச் சரக அலுவலர் ரஞ்சித் ஆகியோர் உடன் இருந்தனர்.