ஆண்டுதோறும் ஜூலை 20-ந்தேதி சர்வதேச செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள டாக்டர். ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக பிரத்தேகமாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அந்தநல்லூர் தொகுதி கல்வி அலுவலர் மருதநாயகம் கேடயம் வழங்கி பாராட்டினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட, மாநில அளவில் நடைபெறக்கூடிய செஸ் போட்டியில் பங்கேற்பர்.