Homeபிற செய்திகள்மனைப்பிரிவு வரைமுறைப்படுத்த கால அவகாசம்: கோவை பொறியாளர் தினவிழாவில் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு -நன்றி

மனைப்பிரிவு வரைமுறைப்படுத்த கால அவகாசம்: கோவை பொறியாளர் தினவிழாவில் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு -நன்றி

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக 2023 பொறியாளர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தலைவர் என்ஜினியர் ஆர்.ராஜதுரை தலைமையில் காலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

அடுத்ததாக 10.30 மணி அளவில் சோமையம்பாளையத்தில் மரம்நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கோவை காட்டூரில் உள்ள சிறப்பு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, குழந்தைகளுடன் சிறப்பான முறையில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது.

மேலும் மாலை 6.30 மணியளவில் ரத்னா ரெசிடென்சி ஹோட்டலில் பொறியாளர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

பாரத் ரத்னா விஸ்வேஸ்வர ஐயாவின் திரு உருவப்படத்திற்கு பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து அனைத்து பொறியாளர்களும் மரியா தை செய்தனர். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜதுரை தலைமை உரையாற்றினார்.

அப்பே £து அவர், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக கோவையில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு நமது சங்கத்தின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறை வேற்றுவதாக அறிவித்தா ர்கள். அதில் ஒரு கோரிக்கையான அங்கீகாரம் அற்ற மனை பிரிவுகளை வரை முறைப்படுத்தமேலும் 6 மாத காலம் அவகாசம் பெற்றுத் தந்துள்ளார்.

அதற்கு அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். பின்னர் இன்ஜினியரிங் கவுன்சில் அமைத்து தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அடுத்ததாக கிரஷர் மற்றும் குவாரி ஓனர் அசோசியேஷனின் தமிழ் நாடு மாநில தலைவர் சின்னசாமி சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் இளம் வாழ்நாள் சாதனையாளர் விருதை அனன்யா குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தின் தலைவர் பொறியாளர் ஏ.யுவராஜ்க்கு சிறப்பு விருந்தினர் சின்னசாமி மற்றும் தலைவர் ராஜதுரை ஆகியோர் வழங்கி கௌரவித்தார்கள்.

பின்னர் விருதைப் பெற்றுக் கொண்ட ஏ.யுவராஜ் ஏற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து செயலாளர் அறிக்கையை செயலாளர் வி.கே.தாமோதரசாமி தாக்கல் செய்தார். பின்னர் சங்கத்தின் பொருளாளர் சோமசுந்தரம் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்து நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் ஜி.பி.ஜெயவேல், துணைத் தலைவர் என்ஜினியர் எப்.மரியா ஆரோக்கியசாமி, செயற்குழு மற்றும் பொது க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்து Q RMC நிறுவன தலைவர் ராம்ஜி மற்றம் Q BRICKS நிறுவன பங்குதாரர்கள் விவேகானந்தன், மகேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img