கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட கலெக்டர்/மாவட்ட திட்டக்குழு துணைத்தலைவர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர்/ மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், மாவட்ட திட்ட அலுவலர்/ மாவட்ட ஊராட்சி செயலர் பாஸ்கர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள், நகராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.