கோவை யுபிஎஸ் மற்றும் சோலார், ஸ்டெபிலைசர் அசோசியேஷன் பத்தாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள ஜென் னிஸ் ரெசிடென் சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வ £கிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவராக ஜி.முத்துக் குமார், உதவி தலைவராக கே. பாலசுப்பிரமணியம், செயலாளராக எஸ்.தன சேகர பாண்டியன், பொருளாளராக ஆர்.பிர பாகரன், இணைச் செய லாளராக ஜி.சரவண செல்வன்ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப் பட நடிகர் நாசர் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர் வாகிகளை பாராட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோயம்புத்தூர் அசோசியேஷன் ஆப் யுபிஎஸ். சோலார் மற்றும் ஸ்டெபிலைசர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர் வாகிகளுக்கு பாராட் டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே பதவியில் இருந்த நிர்வாகிகளையும் வாழ்த்துகிறேன்.
இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
சங்கங்கள் எப்படி இருக்கலாம் என்பதில் நடிகர்கள் சங்கத்தை விட உங்கள் சங்கம் சிறப் பாக செயல்படுகிறது.
எங்களுடைய செயல்பா டுகள் வேறு. உங்கள் சங்கத்தின் செயல்பாடுகள் வேறு. எங்கள் சங்கத்தில் அரசியல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். அது எந்தக் கட்சி ஆட் சிக்கு வந்தாலும் இருக்கும். எங்கள் சங்கத்தில் 3000 பேர் உறுப்பினராக உள்ளார்கள்.
உங்களது சங்கத்தில் 200 பேர் உணர்வு பூர்வமாக உள்ளீர்கள்.
சங்கங்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். பிரச் சனைகளை பேசி தீர்க்க வேண்டும்.
இரண்டு குழுக்களாக செயல்படு வதை தவிர்க்க வேண்டும் அப்பொழுதுதான் சங் கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். உங்கள் தொழில் அறிவு சார்ந்ததாக உள்ளதால் உங்கள் சங்கம் ஒற்றுமையாக செயல் பட வேண்டும்.
விஞ்ஞான வளர்ச்சியில் சங்கத்தின் சட்ட திட்டங்களை மாற்றுவதில் தவறில்லை.அதேபோன்று சங்கத்தின் தலைமைகள் மாறி மாறி அமைய வேண்டும்.
அது வளர்ச்சிக்கு நன்றாக இருக்கும் மேற்கண்டவாறு அவர் பேசினார்.
பின்னர் சங்க உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் நாசர் பதில் அளிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.