கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் லயன்ஸ் சங்கம், லோட்டஸ் கண் மருத்துவமனை, கோவை ராவ் மருத்துவமனை, குட் லைப் ரத்த பரிசோதனை நிலையம் இணைந்து கோவை நேரு நகர் மாந கராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடை பெற்றது-.
முகாமை கோவை மாநகராட்சி உறுப்பினர் விஜயகுமார், கலாம் மக்கள் அறக்கட்டளை தலைவர் லயன் செந்தில்குமார், திருமதி சுப்பு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நேரு நகர் லயன்ஸ் சங்க தலை வர் மோகன்ராஜ் ரேவதி, செயலாளர் பால்ராஜ், தேஜஸ்வினி, ராஜேஷ், சிவக்குமார், குமார் கல் பனா ஆகியோர் உடன் இருந்தனர்.
பொதுமக்களுக்கு ரத்தப் பரிசோதனை கண் பரிசோதனை மகளிர் பொது மருத்துவம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.