fbpx
Homeபிற செய்திகள்அண்ணா தொழிற்சங்க கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அண்ணா தொழிற்சங்க கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அதிமுக கட்டுமான பிரிவு மற்றும் அண்ணா உடல் உழைப்பு மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கோவை ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம் முன் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் கே அர்ச்சுணன் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.

உடன் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர்கள் ஆட்டோ அசோக், பி ஆர் கே.குருசாமி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், கட்டுமானப் பிரிவு மாநில பொருளாளர் கே.வி.ஆறுமுகம், கட்டுமானப் பிரிவு மாவட்டத் தலைவர் கன்மலை ஆர் முருகேசன், கட்டுமான பிரிவு மாவட்ட செயலாளர் கேசி.வேலுசாமி, ஏ.கே.ஆர். வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img