பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினராக ஏ.ஜே.கே. கல்லூரி செயலாளர் அஜித் குமார் லால் மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புகளை தற்போது மூன்று பேர் கொண்ட குழு கவனித்து வருகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் நடந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பு சிண்டிகேட் கூட்டத்தில் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினராக இருந்த தனியார் கல்லூரி செயலாளர் வாசுகிக்குப் பதிலாக, ஏ.ஜே.கே. கல்லூரி செயலாளர் அஜீத்குமார் லால்மோகன் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு பல்கலைக்கழக நிர்வாகிகள், ஏ.ஜே.கே. கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.