fbpx
Homeபிற செய்திகள்தேனியில் மே தினவிழா கொண்டாட்டம்

தேனியில் மே தினவிழா கொண்டாட்டம்

தேனியில் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பாக உழைப்பாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதில் தேனி மாவட்ட அனைத்து வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கத்தின் தலைவர் சலீம் ராஜா, செயலாளர் கார்மேகம், பொருளாளர் இளங்கோவன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டார்கள்.

இதேபோல தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று உழைப்பாளர் தினம் மே 1 உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பழனி செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் துணைத் தலைவர் மணிமாறன் கலந்து கொண்டனர்.

அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் பேரூராட்சி பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சார்பாக பொது மக்களுக்கு வெயிலின் தாக்கத்தை போக்க தர்பூசணிபழம் மற்றும் மோர் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img