ஓட்டுநர்களின் தினத்தில் மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா டிரக் அண்டு பஸ் டிவிஷன் சார்பில் மஹிந்திரா சார்த்தி அபியான் மூலம் டிரக் ஓட்டுநர்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
ஓட்டுநரின் பெண் குழந்தைகள் உயர்கல்விக்கான உரிமையை ஆதரிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க் கையை மாற்றியமைப்பதில் மஹிந்திரா சார்த்தி அபி யான் திட்டம் உறுதி பூண்டுள்ளது.
இதில், தேர்ந் தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகையுடன், அவர்களின் சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழும் வழங்கப்படும்.
மஹிந்திரா ட்ரக் அண்ட் பஸ் டிவிஷனின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பில் 2014ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள 75 க்கும் மேற்பட்ட போக்குவரத்து மையங்கள் மூலம் இதுவரை 8,928 இளம் சிறுமிகள் பயனடைந்துள்ளனர்.
இது தொடர்பான நிகழ்ச்சியில் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவின் வணிகத்தலைவர். ஜலஜ்குப்தா பேசுகையில், “மஹிந்திரா சார்த்தி அபியான் திட்டம் வணிக வாகன சுற்றுச்சூழல் அமைப்பில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க உறுதி பூண்டுள்ளது.
மேலும் ஓட்டுநர் சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் டிரக் ஓட்டுனர்களின் மகள்களுக்கு பெரியகனவு காணும் வாய்ப்பு மற்றும் அவர்களின் தொழில் இலக்குகளை நோக்கி அவர்கள் உயர தேவை யான ஆதரவு ஆகியவற்றை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
மஹிந்திரா டிரக் அண்ட் பஸ் லீடர்ஷிப் இந்தியா அமைப்பால் தேர்ந்தெடுக் கப்பட்ட இடங்களில் வரும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும் பாராட்டு விழாவில் டிரக் ஓட்டுநரின் மகள்கள் 1,100 பேருக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.