கோவை கொடீசியாவில் “அக்ரி இன்டெக்ஸ 2025 “ என்ற பெயரில் 23-வது பதிப்பு வேளாண்மை கண்காட்சி வருகிற 10 ந்தேதி தொடங்கி 14ந் தேதி முடிய 5 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்துகொடிசியா தலைவர் கார்த்திகேயன், அக்ரி இன்டெக்ஸ் 2025 தலைவர் ஸ்ரீஹரி, கொடிசியா செயலாளர் யுவராஜ், அக்ரி இன்டெக்ஸ் துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் இன்று (2 – ந் தேதி) நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:- கோவை கொடீசியாவில் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி தொடக்க விழா வருகிற (10 -ந் தேதி )காலை 10 மணிக்கு நடக்கிறது.
வருகிற 14-ந் தேதி முடிய 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை டாக்டர் பி. கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், கோவை விவசாய பல்கலைக்கழக பதிவாளர் தமிழ் வேந்தன், டாக்டர் கே.பி.சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்கள்.
இந்த கண்காட்சியில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா மகாராஷ்ரா குஜராத் டெல்லி உள்பட 15 மாநிலங்களை சேர்ந்த 480 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன.
இந்தியா முழுவதிலும் இருந்து 2 லட்சம் விவசாயிகள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



