fbpx
Homeபிற செய்திகள்திருச்சி புத்தூரில் புதிய வளாகத்தில் ஐஓபி வங்கி கிளை, ஏடிஎம் திறப்பு

திருச்சி புத்தூரில் புதிய வளாகத்தில் ஐஓபி வங்கி கிளை, ஏடிஎம் திறப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) திருச்சி புத்தூர் கிளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வசதி கருதி நேற்று முதல் புதிய வளாகத்தில் செயல்படத் தொடங்கியது.

புதிய வளாகத்தில் வங்கி கிளையை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ. கங்காதாரிணி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.


தனலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் – மருத்துவர் ஆஷிக் நிஹ்மதுல்லாஹ், ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.


விழாவில் பங்கேற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல பொது மேலாளர் ஸ்ரீராம்.ஜி பேசுகையில், இப்பகுதி மக்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான வங்கி சேவைகளையும் ஐஓபி புத்தூர் கிளை வழங்குவதற்கு தயாராக உள்ளது என உறுதி அளித்தார்.

வங்கியின் புதிய வளாகம் திறப்பு விழாவை முன்னிட்டு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கான கடன்களும் நகைக் கடன்களும் வழங்கப்பட்டன.


முன்னதாக, புத்தூர் வங்கி கிளை மேலாளர் மினு.ஆர் அனைவரையும் வரவேற்றார். விழாவில் வங்கி அலுவலர்கள், புத்தூர் பகுதியை சார்ந்த பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img