Homeபிற செய்திகள்சென்னையில் ரீடெய்ல் உச்சி மாநாடு

சென்னையில் ரீடெய்ல் உச்சி மாநாடு

இந்திய ரீடெய்ல் வணிகர் சங்கம் (RAI) சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் ‘சென்னை ரீடெய்ல் உச்சி மாநாடு 2024’ ஐ நடத்தியது. இது, “ரீடெய்ல் வர்த்தகத்தை மாற்றும் உலகம்“ என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டது.

மாநாட்டில் ஓபன் அட்வர்டைசிங் நிறுவனத்தின் இணை நிறுவனர், இயக்கு நரான சொக்கலிங்கம் உட்பட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இளநிலை குப்பண்ணா இயக்குநர் பாலச்சந்தர், குமரவேல் நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர், சௌரப் குமார் சிஇஓ காளீஸ்வரி குழுமம், கோ பேஷன் லிட்., சிஇஓ கௌதம் சரோகி மற்றும் மதுமிதா உதய்குமார் சிந்து பள்ளத்தாக்கின் இணை நிறுவ னர் ஆகியோர் ரீடெய்ல் வர்த்தகம் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்தனர்.

இந்திய ரீடெய்ல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் பேசுகையில்,“புதுமைகளை உருவாக்கும் திறன் இந்த மாறும் சந்தையில் வெற்றியை வரையறுக்கும்“ என்றார். பின்னர் டோனிக் ரீடெய்ல் பிராண்டுகளின் தலைமை நிர்வாக அதிகாரி சோனாலி லால்வானி பேசுகையில், “நவீன ரீடெய்ல் வர்த்தக சூழலுக்கு சுறுசுறுப்பு மற்றும் நுகர்வோர் நடத்தை பற்றிய ஆழமான புரிதல் தேவை” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img