வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழாவில் பெங்களூர் ஏரோநாட்டிகல் வளர்ச்சி நிறுவன திட்ட இயக்குநர் விஞ்ஞானி டாக்டர் மதுசூதன ராவ் பங்கேற்று 783 மாணவ, -மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தி பேசினார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் தர வரிசை பட்டியலில் சிறப்பிடம் பிடித்த 45 மாணவ-மாணவிகளை பாராட்டி கவுரவித்தார்.
மேலும், கடந்த 2023-2024ம் கல்வியாண்டில் 1,529 மாணவ-மாணவிகளுக்கு வேளாளர் அறக்கட்டளையின் மூலம் ரூ.5.7 கோடி கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
விழாவிற்கு கல்லூரி அறக்கட்டளை தலைவர் சி.ஜெயக்குமார், தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், அறக்கட்டளை உறுப்பினர்கள் எம்.யுவராஜா, ராஜ மாணிக்கம், கே.குலசேகரன், வேலுமணி, சின்னசாமி முன்னிலை வகித்தனர்.