கடலூர் மாவட்டத்தில் ‘தமிழ்ப் புதல்வன்” திட்டத்தில் 8,426 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப் படுவதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப் பேற்றது முதல் உயர்கல்வி பயிலும் அரசுபள்ளி மாணவிகளின் சேர்க்கை விதிதம் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.தற்போது இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் ‘தமிழ்ப் புதல்வன்” எனும் மாபெரும் திட்டம் கடந்த 9.8.2024 அன்று முதல் அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் முதற் கட்டமாக இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கல்வியாண்டில் பயிலும் தகுதி வாய்ந்த 8,426மாணவர்களுக்கு ரூ.1000 நேரடியாக அவர் களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வாயிலையும் 8-ம் வகுப்பு அல்லது 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.