fbpx
Homeபிற செய்திகள்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்

கோவை சோமையனூர் பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினார்
சோமையனூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், நேற்று நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்ட், மற்றும் என்டிடிவி டாடா அமைப்பின் சார்பாக முப்பெரும் விழா நடை பெற்றது. உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதிய கழிப்பறைகள், உயர் கல்வி பெற மாணவ மாணவி யர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மற்றும் மலைவாழ் மக்களின் தேவைகளுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை வழ ங்கும் விழா என முப் பெரும் விழாவாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பள்ளியின் தலைமையசிரியை தமிழ் செல்வி வரவேற்புரையாற்றினார். நஞ்சுண்டாபுரம் ஊரா ட்சி மன்ற தலைவர் கார்த்தி கேஸ்வரி சுந்தரராஜ் இத்திட்டம் குறித்து விளக்க வுரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நேட் டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்டு அமைப்பின் நிறுவன தலைவர் சங்கரநாராயண், மாணவர்களுக்கு அளிக்கக் படும் நலத்திட்டங்களால் மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த சாதனைகளை எடுத்து கூறினார். இதனை தொடர் ந்து பள்ளி மாணவர்களுக்கு இரவு நேரத்தில் படிப்பை தொடர சிறிய அளவிலான மின் விளக்குகளை மாணவர்களுக்கு என்டிடி டாடா அமைப்பின் இயக்குநர்கள் சிவக்குமார் சதாசிவம், மற்றும் சதீஷ் பாபு, ஆகியோர் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img