க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் கடந்த மூன் றாண்டுகளில் மட்டும் ரூ.114.43 கோடி மதிப்பீட்டிலான 4,835 வளர்ச்சி திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்க வேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட் சியர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை தேவைகளுக்கு முக்கியத் துவம் அளித்து பல் வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.
பல்வேறு திட்டங் கள் மூலம் கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 5,578 திட் டப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ.114.43 கோடி மதிப்பீட்டில் 4,835 பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள 743 பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் தும்பி வாடி ஊராட்சி புரவி பாளையத்தில் சட் டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சமுதாயக்கூடம் கட்டுமானப் பணிகளையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் பயனாளிகள் இருவர் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தனிநபர் இல்லம் கட்டுமானப் பணிகளையும், ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல் திட்டத்தின் மூலம் பய னாளி இருவர் தலா ரூ.55,000 மதிப்பீட்டில் பழுதடைந்துள்ள தங்களுடைய குடியிருப்பினை புணரமைப்பு செய்யும் பணிகளையும்.
சூடாமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தியளிப்பு திட் டத்தின் மூலம் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விவசாயி ஒருவர் தன்னுடைய விளைநிலத்தில் மண் வரப்பு அமைக்கும் பணியையும் முதல்வரின் கிராம சாலைகள் மேம் பாட்டுத்திட்டத்தின் மூலம் ரூ.79.82 லட்சம் மதிப்பீட்டில் சூடாமணி முதல் வலையனூர் வரை நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டுப் பணிகளையும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-25 மூலம் அகிலாண்டபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.45,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மாணவிகள் கழிவறை கட்டு மானப் பணிகளையும் ரூ.53000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மாணவர்கள் கழிவறை கட்டுமானப் பணிகளையும். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் பயனாளி ஒருவர் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டிவரும் கட்டுமானப் பணிகளையும் என பல்வேறு பணிகள் அனைத்தையும் தரமாகவும், உரிய கால அளவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் ஸ்ரீ லேகா தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.