ஆனைமலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். கடந்த மாதம் 20ஆம் தேதி மணிகண்டனுக்கு சிறப்பு பணி வழங்கப்பட்டது. வால்பாறை சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன வர்கள் குறித்த வழக்குகள் தேர்வு செய்யும் பணி மணிகண்ட னுக்கு அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து 9 வழக்குகளை முறையாக விசாரித்து அந்த வழக்குகளில் காணாமல் போன 11 நபர்களை உரிய முறை யில் கண்டுபிடித்து, ஒன்பது வழக்குகளையும் ஒரே மாதத்தில் திறம்பட முடித்துள்ளார்.
திறமையாக பணியாற்றிய மணிகண்டனுக்கு டிஎஸ்பி கீர்த்தி வாசன் தலைமையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.