fbpx
Homeபிற செய்திகள்கழுத்தில் கத்தி..உயிர் பயத்தில் வாலிபர் கொடுத்த பணம்வழிப்பறியில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்

கழுத்தில் கத்தி..உயிர் பயத்தில் வாலிபர் கொடுத்த பணம்வழிப்பறியில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (21). இவர் கோவையில் பெட்டி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமாநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது கீர்த்தி ராஜனை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து வாலிபர் ஒருவர் பணம் தருமாறு மிரட்டியுள்ளார். உயிர் பயத்தில் கீர்த்தி

ராஜன் தன்னிடம் உள்ள ரூ.1000 தந்துள்ளார். 
பின்னர் நடந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறியில் ஈடுபட்டது பீளமேடு பகுதியை சேர்ந்த மதுசூதன் (29) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img