கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா(28). இவர் அப்பகுதியில் தள்ளுவண்டி கடையில் இட்லி, தோசை போன்ற உணவு வழங்கும் டிபன் செண்டர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கோவை நேரு நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் (15) சாப்பிட வந்துள்ளார்.
அப்போது சாப்பிட்டு விட்டு பணம் தராமல் இளையராஜாவிடம் ரூ.300 வேண்டும் என கத்தியை காட்டி மிரட்டினார். உடனே இளையராஜா சத்தம் போட்டு அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை உதவிக்கு அழைத்தார். ஆட்டோ ஒட்டுநர்கள், அருகில் உள்ளவர்கள் உடனே ஓடி வந்து அச்சிறுவனை பிடித்து பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.