fbpx
Homeபிற செய்திகள்கோ- ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை - முதுநிலை மண்டல...

கோ- ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை – முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி தகவல்

கோ – ஆப்டெக்ஸ் கோவை முதுநிலை மண்டல மேலாளர் ப.அம்சவேணி கூறி இருப்பதாவது: இந்தியாவின் மாபெரும் கூட்டுறவு நிறுவனமான கோ- ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை பிப்ரவரி 1 ம் தேதி தொடங்கியது.

இந்த சிறப்பு விற்பனை மார்ச் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்புத் தள்ளுபடி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் வழங்கப்படுகிறது.

மேலும் மெகா கிளியரன்ஸ் விற்பனையில் 40% முதல் 90% வரை தள்ளுபடி கோ-ஆப்டெக்ஸ் வ.உ.சி. பார்க் கோவை, மருதம் விற்பனை நிலையம், மற்றும் கோவை சாய்பாபா காலனியில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் விற்பனை நிலையம் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், ஆரணி பட்டுப் புடவைகள், கோரா காட் டன் சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், ஆயிரம் புட்டா சேலைகள், புதினம் காட்டன் சேலைகள், செடி புட்டா சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், சேலம் பட்டுப் புடவைகள், ஜெயங்கொண்டம் காட்டன் சேலைகள், சேலம் பிளாக் பிரிண்ட் காட்டன் புடவைகள், முகூர்த்த பட்டுப் புடவைகள், ஏராளமாக வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மேற்கண்ட விற்பனை நிலையங்களில் பழசுக்கு புதுசு சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பட்டுப் புடவைகளை மாற்றிக் கொண்டு அதற்கான மதிப்பில் தங் களுக்கு தேவைப்படும் வேறு எந்த ரகங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும். மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300-லிருந்து ஆரம்பமாகிறது. வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை செலுத்தினால் 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப் டெக்ஸ் நிறுவனமே செலுத்தும்.

சேமிப்புத்திட்ட வாடிக்கையாளர்கள் கூடுதல் முதிர்வுத் தொகைக்கு துணிகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img