பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்கள், ஃப்யூச்சர் கேர் குழுமத்துடன் இணைந்து, “எஜூ கான்வியா 2026” எனும் அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சியை கடந்த மாதம் பிப்.28 அன்று அமிர்தா பல்கலைக்கழகம் அருகிலுள்ள ஹார்மனி சம்மிட் மாநாட்டு மையத்தில் நடத்தியது.
கார்லிட்டோ நூன்ஸ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
ஃப்யூச்சர் கேர் குழுமத்தின் நிறுவனர் மனோஜ் மனயத்தோடி வரவேற்புரை ஆற்றினார்.
சூரத்தைச் சேர்ந்த பி.பி.சவானி பல்கலைக் கழகத்தின் இயக்குநர் ஸ்நேஹ் சவானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி நிறுவனங்களில் புதுமை குறித்து பேசினார்.
ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முரளி கிருஷ்ணா, டாக்டர் சஹீஷ் மொய்தீன் மற்றும் லிம்னேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினர்.



