fbpx
Homeபிற செய்திகள்கோவை ரெசிடென்சி ஹோட்டலில் நகை கண்காட்சி துவக்கம்

கோவை ரெசிடென்சி ஹோட்டலில் நகை கண்காட்சி துவக்கம்

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெறும் நகை கண்காட்சி இன்று தொடங்கியது.

கோவையில் அபர்ணா சுன்கு வடிவமைத்த கலஷா, நுண் நகைகள், தனித்துவ மிக்க, கைவினைஞர்களின் நகைகளின் கண்காட்சி இன்று, நாளை என 2 நாள் நடக்கிறது. இது குறித்து பெங்களூர் கலஷா நுண் நகைகளின் உரிமை யாளர் ஷரவன் குமார் குடுர் கூறுகையில், “இந்த மாபெரும் கண்காட்சி நிகழ்வை, லாப நோக்கமின்றி, நேர்த்தியான முறையில் நடத்துகிறோம். புதியதாக கருத்தாக்கம் கொண்ட மணப் பெண் நகைகள், கோவை
வாடிக்கையாளர் களுக்கென்றே சிறப்பம் சங்கள் கொண்ட தங்கம், வைர நகைகளை அறிமுகம் செய்கிறோம்” என்றார்.

முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வித்யா பிரபா பிரிட்ஜ்வுட்ஸ் பள்ளிகள் நிறுவனர், திவ்யா வெங்கிடபதி கிட்ஸர் இயக்குனர், அன்கிதா தினேஷ் ரென்கோ மில்ஸ் இயக்குனர், அனுராதா ஸ்ரீ சிவசக்தி பில்டர்ஸ், தீபா சுகுமார் வஸ்த்ர வில்லா உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img