fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சிந்தாமணி கூட்டுறவு மருத்துவ மையம் திறப்பு விழா

கோவையில் சிந்தாமணி கூட்டுறவு மருத்துவ மையம் திறப்பு விழா

கோவையில் 83 வருட வரலாற்று சிறப்புமிக்க வடகோவை கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கே.881 வளாகத்தில் புதிதாக சிந்தாமணி கூட்டுறவு மருத்துவ மையம் திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழாவிற்கு கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் ராமகிருஷ்ணன், கோவை மண்டல இணைப்பதிவாளர் அழகிரி, கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் சிவக்குமார், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) ராஜேந்திரன், காவியா, துணைப்பதிவாளர், கோவை நகர கூட்டுறவு வங்கி, பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் சுவேதா, மருத்துவர் ராகுல் சின்னத்துரை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக துவக்கப்பட்ட சிந்தாமணி கூட்டுறவு மருத்துவ மையத்தில் பொதுமக்கள் மற்றும் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குறைவான கட்டணத்தில் மருத்துவம் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி அனைத்து மருந்துகளுக்கும் 20% தள்ளுபடி விலையிலும், இன்சுலின் 15% தள்ளுபடி விலையிலும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறி, எழுது பொருட்கள், மொபைல் போன், அழகுசாதன பொருட்கள் போன்ற அனைத்தும் ஒரே கூரையின் கீழ் குறைந்த விலையில் கிடைக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img