Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர். அலமேலு சிறப்புரை ஆற்றினார்.

முதலாம் நாள் விழாவிற்கு, கோவை அல்ஸ்டாம் நிறுவனத்தின் மனிதவளத் மேம்பட்டு குழு தலைவர் சாயா பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இரண்டாம் நாள் விழாவில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரத்தின் எம்பெடெட் – குரு எல் எல் சி நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷ் ஜானகிராமன் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.

பின்னர் முன்னாள் மாணவர்கள் கோவை காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவளத் மேம்பட்டு குழு இயக்குனர் சக்திவேல் ராஜசேகர்,
பெங்களூர் இன்ஜினியரிங் ஆர்ம் எம்பெடட் டெக்னாலஜிஸ் இயக்குநர் பழனியப்பன் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினர்.

விழா இறுதியில், பேராசிரியர் உதயராணி மற்றும் பேராசிரியர் விசித்ரா சிவாஜி ஆகியோர் நன்றி கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img