fbpx
Homeபிற செய்திகள்கேஏஏஆர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிமாட்ஸ் மாணவர்கள் 19 பேருக்கு பணி

கேஏஏஆர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிமாட்ஸ் மாணவர்கள் 19 பேருக்கு பணி

சிமாட்ஸ் பல்கலைக் கழகத்தின் சிமாட்ஸ் என்ஜி னியரிங் கல்லூரியைச் சேர்ந்த 3-ம் ஆண்டு படிக்கும் 19 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை பணி அமர்த்த கேஏஏஆர் டெக் னாலஜிஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

தர வரிசைப் பட்டியலில் இப்பல்கலைக்கழகம் சிறப் பானதொரு இடத்தை பெற்றிருப்பதோடு, இதன் பொறியியல் பாடத் திட்டம் மற்றும் மாணவர்களின் விதிவிலக்கான திறன்கள் ஆகியவை மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு உத்த ரவாதம் அளிக்கின்றன.

அந்த வகையில், இந்த மாண வர்கள் பயிற்சி உடன் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிமாட்ஸ் பல்லைக் கழகத்தின் வேந்தர் என்.எம். வீரையன், ‘இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும்’ என்று வாழ்த்தினார்.

சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக் கூறுகையில்,
ஊதியத்துடன் அவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது என்பது எங்களின் சிறப்பான கல்வி சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றார்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப பாடப் பிரிவு மாணவி திவ்யா கூறுகையில், கேஏஏஆர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் எங்களுக்கு கிடைத்துள்ள பயிற்சி என்பது நம்பமுடியாத வாய்ப்பாகும். இந்த தருணத்தில் எங்களை நன்றாக தயார்படுத்திய பேராசிரியர்கள், வேலைவாய்ப்பு பிரிவு ஆகி யோருக்கு நன்றி என்றார்.

பயிற்சிக்கு கேஏஏஆர் டெக்னாலஜிஸ் நிறுவனம், மாணவர்களை தேர்வு செய்தவிதம் மிகக்கடுமை யாக இருந்தது.

2023-ம் ஆண்டுக்கான என்ஐஆர்எப்-ன் சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி 64-வது இடத்தையும், சிமாட்ஸ் பல்கலைக்கழகம் 13 இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img