fbpx
Homeபிற செய்திகள்பிரசன்னா கியாவின் அங்கீகரிக்கப்பட்ட அதிநவீன கோவை ஷோரூம் திறப்பு

பிரசன்னா கியாவின் அங்கீகரிக்கப்பட்ட அதிநவீன கோவை ஷோரூம் திறப்பு

கியா இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பிரசன்னா கியா, கோவை ராமநாதபுரத்தில் அதிநவீன புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறக்கப்பட்டது.
கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள பிரசன்னா கியா டீலர் ஷிப் மூலம், கொங்கு பகுதியில் உள்ள வாடிக் கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கியா பிராண்டட் கார்களுக்கான விற்பனை மற்றும் கார் சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இணை நிர்வாக இயக்குநர் அனிஷ் பிரசன்னா பேசும்போது, கியா மோட்டார்ஸ் உடனான இந்த பயணத்தில் புதுப்பிக்கப்பட்ட அதிநவீன பிரீமியம் ஷோரூமில் இருந்து புதிய செல்டோஸ் அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறோம்.

9 கார் டிஸ்பிளே வசதியுடன் உள்ள புதுப்பிக்கப்பட்ட டீலர்ஷிப் மற்றும் குழுவின் நிபுணத்துவம் ஆகியவை புதிய செல்டோஸ் சந்தையில் ஆழமாக ஊடுருவ உதவும்.

தமிழ்நாட்டின் மேற்கு பகுதியான கொங்கு பகுதி எங்களின் வளர்ச்சிக்கு உகந்த முக்கிய பகுதியாகும். இந்த பிராந்தியத்தில் செல்டோஸ் விற்பனை, சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் புதிய அளவுகோலை அமைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

குமரன் மில்ஸ் இயக்குநர் கபில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மண்டல மேலாளர் ஸ்ரீஜா, பாங்க் ஆஃப் பரோடா, மண்டல தலைவர் ஸ்ரீனிவாசன், லட்சுமி கோட்ஸ் ஏஜென் சிஸ், செயல் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம், பிரசன்னா குழுமங்களின் இயக்குநர் தேவிகலா, லட்சுமி கார்டு குளோத்திங் தலைவர் சாந்தாராம் மற்றும் பிரசன்னா குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் அனிஷ் பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img