fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் பழங்கால கார்கள் கண்காட்சி

சென்னையில் பழங்கால கார்கள் கண்காட்சி

தி ஹிஸ்டாரிக்கல் கார்ஸ் அசோசியேஷன் இந்தியா (HCAI), சென்னையின் ஓல்டு மெட்ராஸ் சாலையில் ஹோட்டல் துரியா வளாகத்தில் ராயலா டெக்னோ பார்க் அமைவிடத்தில் அகில இந்திய அளவிலான பழங்கால மற்றும் கிளாசிக் கார் கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்தியது.

தலைமை விருந்தினர் பெருநகர சென்னையின் காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேசியதாவது: கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பழங்கால கார்களை பார்ப்பதற்காக இவ்வளவு வருகையாளர்களை திரண்டிருப்பதால், சாலையில் வாகனங்களை கவனமாகவும், விதிகளை பின்பற்றியும் ஒட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

சாலைப்போக்குவரத்து என்பது மிக முக்கியம். சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

HCAI-ன் தலைவர் ரஞ்சித் பிரதாப் கூறியதாவது:
காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அணிவரிசையில் மிகப் பழமையான காராக 1926-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எனது T Ford காரும் இடம்பெற்றிருக்கிறது. பிசிகிமி மற்றும் அதன் அமைப்பு குழு இத்தகைய மாபெரும் நிகழ்வை நடத்துவது இவ்வகையினத்தில் இது முதல்முறையாகும் என்றார்.

HCAI-ன் செயலர் வி.எஸ். கைலாஷ் பேசுகையில், ‘‘இந்தியா முழுவதிலுமிருந்து பங்கேற்புடன் மாபெரும் கண்காட்சி நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல்முறை. ஏறக்குறைய 50-100 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த அழகான கார்களை காண மக்கள் மிக அதிக எண்ணிக்கையில் வந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

HCAI-ன் துணைத்தலைவர் ராஜேஷ் அம்பால் கூறும்போது, கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்த கார்கள் அனைத்தும், இந்தியாவெங்கிலுமுள்ள மிகப் பிரபலமான குழுமங்களுக்கு சொந்தமானவை என்றார்.

பழங்கால கார்களை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமான மக்கள் வந்திருந்தனர். மொத்தத்தில் 56 பழங்கால கார்களும் 12 இருசக்கர வாகனங்களும் இடம்பெற்றிருந்தன.

டெல்லியின் HMCI, மும்பையின் VCCCI, கொல்கத்தாவின் EIMG,, பெங்களுருவைச் சேர்ந்த KVCCCI ஆகிய விண்டேஜ் கார்களது கிளப்புகள் பங்கேற்றிருந்தன.

படிக்க வேண்டும்

spot_img