கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்லூரி சார்பில், கோயம்புத்தூர் ஓபன் கோல்ப் போட்டிகள், கோவை கோல்ப் கிளப்பில் நடந்தது.
கே.ஜி.ஐ.எஸ்.எல்., பிரைமா டோனா என்ற தயாரிப்பு நிறு வனம், டாடா ஸ்டீல் பிஜிடிஐ ஆகியோர் இணைந்து நடத்திய, இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் ஓபன் கோல்ப் போட்டியில், வங்க தேசம், இலங்கை, ஜப்பான், நேபாளம், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 126 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில், கோவையை சேர்ந்த மூன்று பேரும் பங்கேற்றிருந்தனர்.
கே.ஜி.ஐ.எஸ்.எல்., (ரிநிவீஷிலி) வழங்கிய, ‘கோயம்புத்தூர் ஓபன் 2023’ -ல், ஹர்ஷ்ஜீத் சிங் சேத்தி, தனது முதல் பட்டத்தை வென்றார்.
தில்லியை சேர்ந்த கோல்ப் வீரர் ஹர்ஷ்ஜீத் சிங் சேத்தி, தனது சிறந்த முயற்சியால் பிளே ஆஃப் வரை சென்று, அவர் அனுபவமிக்க கோல்ப் வீரரான ஓம் பிரகாஷ் சவுகானை வீழ்த்தினார்.
21 வயதான இவர் பெற்ற வெற்றியின் வாயிலாக, டாடா ஸ்டீல் பிஜிடிஐ தரவரிசையில், 81-வது இடத்திலிருந்து 11-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து, அவருக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.



