fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் காலை உணவு திட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு

நீலகிரியில் காலை உணவு திட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் கோடமூலா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அள்ளூர் பகுதியில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வருகை தந்துள்ள குழந்தைகளின் எடை உயரம் உள்ளிட்டவை பார்வையிட்டார்.

பின்னர், கோடமூலா கிராமத்தில் தாட்கோ மூலம் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளையும், பழங்குடியினர்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளையும் நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img