Homeபிற செய்திகள்பிரெயினோ பிரெயின் திறமைகளின் போட்டி

பிரெயினோ பிரெயின் திறமைகளின் போட்டி

கோவையில் குழந்தைகளுக்கான 155வது பிரெயினோ பிரெயின் மண்டல அபாகஸ் திறமைகளின் திருவிழா போட்டி சரவணம்பட்டியில் உள்ள குளோபல் அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள், 3 நிமிடங்கள் கொண்ட உற்சாகமான போட்டியில் தனது மனக்கணக்கின் வேகம், துல்லியம், கவனிப்பு, திறன் வளர்ப்பின் முக்கியத்துவம் போன்ற திறமைகளை வெளிப்படுத்தினர். மாலை போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்களையும் பிரெயினோபிரெயின் நிர்வாக இயக்குனரும் முதன்மை சிறப்பு விருந்தினருமான ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் அருள் சுப்ரமணியம் ஆகியோர் வழங்கினர்.

மேலும் 45 நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட மையங்களுடன், பிரெயினோபிரெயின் குழந் தைகளின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் தளமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img