இந்திய திருநாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை காளப்பட்டி அருகில் உள்ள கைகோளம்பாளையம் பாரதி விளையாட்டுக் குழுவின் 37 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான ஆண்கள் கபாடி போட்டி மற்றும் குழந்தைகள், பெண்களுக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.
கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கபாடி அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் முதல் பரிசை டாக்டர் என்ஜிபி கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை இளங்கோ நகர் எவரெஸ்ட் அணியும், 3ஆம் இடத்தை பாரதி விளையாட்டுக் குழு அணியும், 4ஆம் இடத்தை அம்மன்குளம் பிபிஎஸ் அணியும் பிடித்தன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் பிஆர்ஜி.அருண்குமார் மற்றும் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையும், ரொக்க பரிசையும் வழங்கினார்கள்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன் பரிசு பெற்ற அணியினரை வாழ்த்தி பேசினார். விழாவிற்கான ஏற்பாடு களை பாரதி விளையாட்டு குழுவின் தலைவர் சண்முகம், செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.