Homeபிற செய்திகள்சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி தேர்வு: மேயர் ஜெகன் பெரியசாமிக்கு சேகர தலைவர் பாராட்டு

சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி தேர்வு: மேயர் ஜெகன் பெரியசாமிக்கு சேகர தலைவர் பாராட்டு

தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2ம் இடத்திற்கு தேர்வானதை யொட்டி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு சேகர தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

மாநகராட்சி மேயராக திமுக தலைமை செயற் குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி பொறுப் பேற்ற நாள் முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் பாரபட்சமின்றி பொது மக்களுக்கு தேவை யான கட்டமைப்பு பணிகளை முழுமையாக அரசுத் துறை அதிகாரிகள் அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி மட்டுமின்றி கனிமொழி எம்.பி அமைச் சர்கள் கீதாஜீவன், நேரு, உள்ளிட்டவர்களின் ஆலோசனை படி சிறுகுறு நடுத்தர வியாபார பிரமுகர்கள் பாதசாரிகள் வாகன ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினரின் நலன் முக்கியம் என கருதி தொழிற்சாலை நிறைந்த மாநகராட்சி பகுதியில் மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

எதிர்வரும் காலங்களில் பன்நாட்டு விமான நிலை யம் உருவாக இருப்பதால் பெரிய துறைமுக நகர மாக இருந்து வருவதால் அனைத்து பகுதிகளில் மரம் நடுவது மட்டு மின்றி வீட்டிற்கு ஓரு மரம் நடு வோம் என்ற கொள்கை யோடு தூத்துக்குடி மாநராட்சி பணியாற்றி வருகிறது.

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்கள் துயர் துடைக்கும் வகையில் சிறப்பாக மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டதற்காக தமிழ கத்தில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

அதற்கு முழுமையாக இரவு பகல் பாராமல் பணியாற்றிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட போல்பேட்டை சிஎஸ்ஐ தூய மிகாவேல் ஆலயத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

போல் பேட்டை சேகர தலைவர் அருட்திரு லிவிங்ஸ்டன் நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்து கௌர வித்தார். சபை ஊழியர்கள் மனோ ரஞ்சித் மற்றும் கமிட்டி அங்கத் தினர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img