கிராமோத்தியோக விகாஸ் யோஜனாவின் வன அடிப்படையி லான தொழில் திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் ஹாசனூர் ரீடு நிறுவனத்தில் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சி கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், சென்னை மாநில அலுவலகம் மற்றும் ரீடு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
ரீடு நிறுவன இயக்குநர் ஆர்.கருப் புசாமி, சாரு மேல்நிலைப் பள்ளி கல்வி இயக்குநர் போஸ்கோ இறையன்பு, சிறப்பு விருந்தினர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் யோகேஷ் குமார் கார்க், ஆர்.வாசுராஜன் (இணை இயக்குநர், KVIC, சென்னை), முருகேசன் (துணை காவல் ஆய்வாளர், ஹாசனூர்), ரீடு நிறுவனத்தின் அலுவலர்கள் பழனி சாமி, என்.பூந்தமிழன், சிவராஜ், சரவ ணக்குமார், ரம்யா மற்றும் செல்வி கிருத்திகைஸ்வரி ஆகியோர் உரை ஆற்றினர்.



