fbpx
Homeபிற செய்திகள்ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் 16வது பட்டமளிப்பு

ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் 16வது பட்டமளிப்பு

ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 16-வது பட்டமளிப்பு விழா சென்னை படூரில் அமைந்துள்ள பே ரேஞ்ச் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

எரித்ரியா நாட்டின் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளின் (இந்தியா) டீன் அலெம் செஹாயே வோல்டெமரியம் தலைமை விருந்தினராக பங்கேற்றார். நாஸ்காம் அமைப்பின் தலைவர் ராஜேஷ் நம்பியார், கடல்சார் அறிவியல் – தொழில்நுட்ப ஆய்வகம் , DRDO-ன் இயக்குநர் டாக்டர். ஆப்ரகாம் வர்கீஸ், சென்னை கிளெனீகில்ஸ் ஹெல்த் சிட்டியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையின் இயக்குநர் டாக்டர் இம்மானுவேல் ஆகியோர் இப்பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு இப்பல்கலையின் வேந்தர் டாக்டர். ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் தலைமை வகித்தார்.

பொறியியல், கட்டுமானக்கலை, மேலாண்மை, அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல்கள், கலை மற்றும் அறிவியல், சுகாதார அறிவியல் மற்றும் ஹிந்துஸ்தான் ஆன்லைன் ஆகியவை உட்பட பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் முனைவர் கல்வி திட்டங்களில் தேர்ச்சி பெற்ற 2500-க்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

டிஜிட்டல் மேம்பாட்டுக்கான மாற்றத்தில் 30 ஆண்டுகால நேர்த்தியான பங்களிப்புக்காக ராஜேஷ் நம்பியார், தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய ஆராய்ச்சியில் சிறப்பான சாதனைகளுக்காக டாக்டர். ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் சுகாதார பராமரிப்பை மேம்படுத்துவதில் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்காக டாக்டர் இம்மானுவேல் ஆகியோருக்கும் கவுரவ முனைவர் பட்டங்களை இப்பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்தது.

16-வது பட்டமளிப்பு விழா நிகழ்வின் ஒரு அங்கமாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஐஐடி ரோபார் போன்ற பல நிலையங்களின் கூட்டாண்மையோடு சி.பி.எஸ்.எல் என்பதையும் இப்பல்கலைக்கழகம் தொடங்கி வைத்திருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img