கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான விஜயா வழிகாட்டுதல்படியும், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஒழிப்பு பற்றிய சட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ரமேஷ், போதை பழக்கத்தினால் வாழ்க்கையில் உடல் அளவில் மற்றும் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமூகத்தில் போதை பழக்கம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்தும், கட்டணமில்லா இலவச சட்ட உதவி தொலைபேசி எண்: (15100) பயன்பாடு குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவகுமார், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்