fbpx
Homeபிற செய்திகள்தி.சு.அவினாசிலிங்கம் நினைவு தினம்; உருவ சிலைக்கு மரியாதை

தி.சு.அவினாசிலிங்கம் நினைவு தினம்; உருவ சிலைக்கு மரியாதை

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் அமரர் அய்யா
தி.சு.அவினாசிலிங்கத்தின் 33வது ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நேற்று திருச்சிற்றம்பலம் கலையரங்கில் நடைபெற்றது.

இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கள் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர் வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க. மீனாட்சி சுந்தரம் “நம் அய்யா தன்னலமில்லாத சிந்தையினையும் தொலைநோக்குப் பார்வையினையும் கொண்டவர்”என்றார்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பி. குழந்தைவேல் “அய்யா வின் வாழ்க்கையை எடுத்தியம்புகின்ற சுயசரிதைப் புத்தகமாகத் திகழ்கின்ற ‘The Sacred Touch’ நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று என்றும், அய்யா பிறந்த ஆண்டு என்பது உலக அளவில் மிகச்சிறந்த ஆண்டு எவ்வாறெனில் பெண்கள் கல்வி பயில இயலாத சூழலில் கல்வி பயின்று வளர்ச்சி பெற்ற மேரி கியூரி இயற்பியல் துறைக்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு” என்றார்.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள இராமகிருஷ்ணர் கோவிலில் இசைத் துறையின் சார்பாக காலை 6.00 மணி முதல் கூட்டுப்பிரார்த்தனை (பஜனை) நடைபெற்றது. நினைவு மண்டபத்திலுள்ள அய்யா சிலைக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img