ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான குறைத் தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னாள் படை வீரர்களிடமிருந்து தனித்தனியாக ஒவ்வொருவரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து முன்னாள் படை வீரர்கள் நலனுக்காக மாவட்ட தொழில் மையம், முன் னோடி வங்கிகள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட திறன் வளர்ப்பு பயிற்சித்துறை போன்ற அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களில் பயன்பெற அரசின் திட் டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.
அனைத்து மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து அடுத்த கூட்டத்திற்குள் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, முன்னாள் படை வீரர் நல வாரியத்தின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.95 ஆயிரம் மதிப்பீட்டிலான கல்வி உதவிக் தொகைக்கான ஆணைகளை ஆட்சியர் சந்திரகலா வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் ஆனந்தன், முன் னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம்ஜி குமார், முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர்
சடை யப்பன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.