Homeபிற செய்திகள்கோவையில் சுற்றுலாத்துறையில் செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் தொடக்கம்

கோவையில் சுற்றுலாத்துறையில் செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் தொடக்கம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமையான முயற்சிகளை பயன் படுத்தி சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தும் திட்டங்கள் கோவையில் தொடங்கப்பட்டன.
தி ரெசிடென்சி ஓட்ட லில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் திட்டங்களை தொடங்கி வைத்தார். சுற்றுலாத் துறை இயக்குநர் / தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர், சுற்றுலாத்துறை இணை இயக்குநர் / மாவட்ட வரு வாய் அலுவலர் சேக் மன்சூர், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி, தமிழ்நாடு சுற்றுலா சுற் றுப்பாதைகள் தொடர்பான செயற்கை நுண்ணறிவு காணொ ளிகள் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன. மேலும், “ரீஇமேஜின் டிஎன்” செயற்கை நுண்ணறிவு காணொளிப் போட்டி மற்றும் “தமிழ்நாடு சுற்றுலா புதுமைச் சவால் -2026” அறிமுகப்படுத்தப்பட்டன.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக ரூ.2 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்றும், ரூ.19 கோடியில் திருமூர்த்தி அணை பூங்கா மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
‘தமிழ்நாடு சுற்றுலா புதுமைச் சவால் -2026’ போட்டிக்கு அக்டோபர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சுற்றுலா புகைப்படக் கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img