உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நீலகிரி ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் சார்பில் உதகையில் உணவு திருவிழா நடைபெற்றது.
அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் நடந்த விழாவில் 16 ஹோட்டல்கள் பங்கேற்றன. ரூ.50 முதல் ரூ.500 வரை விலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன. நூடுல்ஸ், பிரியாணி, பீட்சா, பர்கர் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி ருசித்தனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய விழா இரவு 10 மணி வரை நடைபெற்றது.



