இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் வங்கிகளில் ஒன்றான சூர்யோதாய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, சென்னையின் அசோக் நகரில் தனது புதிய கிளையைத் துவங்கியுள்ளது. சென்னையில் 11வது கிளையை துவக்கியதன் மூலம் அதன் வலையமைப்பை தமிழ்நாட்டில்
23 கிளைகளாக விரிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், சூர்யோதாய் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர் பாஸ்கர் பாபு முன்னிலையில் க்ரோ பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் அர்ஜுன் முரளிதரன் இந்த புதிய கிளையை துவக்கி வைத்தார்.
சில்லறை வாடிக்கையாளர்கள், சில்லறை வணிகங்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மீது தனி கவனம் செலுத்தும் இவ்வங்கி சேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகைகள், அடமானக் கடன்கள், இரு சக்கர வாகனக் கடன்கள், வணிக வாகனக் கடன்கள் போன்ற பலதரப்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது.
இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வரும் சூர்யோதாய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.