fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல் கலைக்கழத்தின் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம், பரங்கிப்பேட்டையில் உயிரி தொழில்நுட்பவியல் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு நிதி உதவி யுடன் ‘நோய் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடத்தியது.

இதில் 150-க்கும் மேற்பட்ட கல்லூரி இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் எம். கலைச்செல்வம் வரவேற் றார். புலமுதல்வர் பி. அனந்தராமன் துவக்கி வைத்தார்.

கருத்தரங்கின் அமைப்பு செயலாளர் பி.தெய்வ சிகாமணி, இணைப் பேராசிரியர் மீன்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மீன்களின் நோய் கண்டறியும் முறை களையும் பற்றி எடுத்துரைத்தார்.

கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்க லைக்கழக பதிவாளர் ஆர்.சிங்காரவேல் கருத் தரங்க கையேட்டினை வெளியிட்டு இன்றைய மீன்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும் மற்றும் வேளாண் உற்பத்தியில் மீன் வளத்துறையின் முக்கியத்துவத் தையும் பேசினார்.

அமைப்புச் செயலாளர் பி.தெய்வசிகாமணி, இணைப் பேராசிரியர் மற்றும் இணை அமைப்புச் செயலாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து மாணவர்கள் மற்றும் ஆராயிச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருத்தரங்கினை மேலும் மேலும் நடத்த வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணை பேராசிரியர் பி.சந் தானம் மீன்களின் உற்பத்தி திறன் மற்றும் தீவன மேம்பாடுகளைப்பற்றி கானொளி காட்சி மூலமாக இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

ஹச்.ஆன் சுஜி உதவி பேராசிரியர் நன்றி கூறி னார். மறுநாள் நிறைவு விழாவில் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் இயக்குநர், புலமுதல்வர், முனைவர் பேராசிரியர் எஸ்.அறிவுடை நம்பி, இயக்குநர் உள்தர உத்தரவாத பிரிவு மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், அண்ணா மலைப் பல்கலைக்கழகம் மற்றும் பி. மீனா, இணைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, விலங்கியல் துறை, சென்னை ஆகியோர் நன்னீர் மற்றும் கடல் மீன்களின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தினையும் அதன் எதிர்ப்பு சக்திகள் மற் றும் நன்மைகளையும் எடுத்தரைத்தனர்.

டி. பாலசுப்பிமணியன் முன்னாள் புலமுதல்வர், கடல் அறிவியல் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் முன் னாள் துணைவேந்தர், இன்றைய செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமியின் ஆலோசகர் சிறப்புரையாற்றினார்.

பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
அமைப்புச் செயலாளர் பி.தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img