fbpx
Homeபிற செய்திகள்மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் திவாகருக்கு...

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் திவாகருக்கு வெள்ளிப்பதக்கம்

மதுரையில் நடைபெற்ற மாநில அள விலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் எஸ்.திவாகர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மதுரை ரைபிள் கிளப் சார்பில், 48-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, அண்மையில் மதுரை யில் நடைபெற்றது.

இப் போட்டியில்6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி, கோவை குரூப் தேசிய மாணவர் படைப் பிரிவு சார்பில், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியின் பி.காம். ஐ.டி. மூன் றாமாண்டு மாணவர் எஸ்.திவாகர் கலந்து கொண்டார்.

இவர் 50 மீட்டர் ரைபிள் புரோன், ஜூனியர் ஆண்கள் தனிப்பிரிவில், 564 புள்ளிகள் பெற்று இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் பொதுப்பிரிவில் 5-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு தேசிய மாணவர் படை இயக் குநரகம் நடத்திய மாநி லப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தேர்வான இவர், தற்போது போட்டியில் பதக்கம் வென்று, தென் மண்டலம் மற்றும் தேசிய அளவிலான போட்டி களிலும் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தது.

இது குறித்து மாணவர் எஸ்.திவாகர் கூறும்போது, “50 மீட்டர் ரைபிள் புரோன் ஜூனியர் ஆண்கள் மற்றும் ஆண்கள் குழுப்பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றேன். மொத்தம் 60 தோட்டக்கள் கொடுக்கப் பட்டன.

ஒவ்வொன்றும் 10 மதிப்பெண். ஒரு மணி நேரத்திற்குள் 60 தோட்டக்களையும் இலக்கைச் சுட்டு முடிக்க வேண்டும். 25 நிமிடங் களில் போட்டியை முடித்து, மொத்தமுள்ள 600 மதிப்பெண்களில், நான் 564 மதிப்பெண் பெற்றேன்.

இதன்மூலம் ஜூனியர் ஆண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் 4-வது இடமும், குழுப் போட்டியில் 5-வது இடமும் பெற்றேன். தமிழ்நாடு தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் பங்கேற்றவர்களில் ஜூனியர் ஆண்கள் பிரிவில் பதக்கம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளேன்” என்றார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், தேசிய மாணவர் படை கேப்டன் ஈ.விவேக் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img