fbpx
Homeபிற செய்திகள்இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மால்வாய் கிளை புதிய அலுவலகம் திறப்பு விழா

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மால்வாய் கிளை புதிய அலுவலகம் திறப்பு விழா

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்திற் குட்பட்ட மால்வாய் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மால்வாய் கிளை, வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான மற்றும் விரிவான வங்கி சேவைகளை வழங்கும் நோக்கில் புதிய மற்றும் விசாலமான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய அலுவலகம் எண் 6/59, தெற்கு தெரு, மால்வாய், லால்குடி வட்டம், திருச்சி & 621652 என்ற முகவரியில் அமைந்துள்ளது. இப்புதிய வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
புதிய அலுவலக வளாகத்தை என்.சதீஷ் குமார், (உதவி பொது மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, திருச்சி மண்டல அலுவலகம்) திறந்து வைத்தார்.விழாவில் வங்கி அதிகாரிகள், வாடிக்கை யாளர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய அலுவலகம் மூலம் சேமிப்புக் கணக்குகள், வைப்புத் திட்டங்கள், விவசாய மற்றும் நகைக் கடன்கள், டிஜிட்டல் வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்து நவீன வங்கி சேவைகளும் விரைவாக வழங்கப்படும் என கிளை மேலாளர் கே.ராஜேஷ் உறுதியளித்தார்.
மேலும், வாடிக்கை யாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட வசதி களுடன் அமைக்கப் பட்டுள்ள வங்கியின் இந்த புதிய வளாகம், மால்வாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் வங்கி சேவை தேவைகளை பூர்த்தி செய்யும் என தெரிவிக் கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img